மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயில் பெட்டிகளில் உள்ள வசதிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயில் பெட்டிகளில் உள்ள வசதிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னையில் ரூ.14,600 கோடி செலவில், மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு 45.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2-வது வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும் சார்நிலைக் கடனாக 5 சதவிகிதமும் வழங்குகிறது. தமிழ்நாடு அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும், சார்நிலை கடனாக 5.78 சதவிகிதமும் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 சதவிகித நிதி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து (த்ஹல்ஹய் ண்ய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் ஹஞ்ங்ய்ஸ்ரீஹ்) கடனாகப் பெறப்படுகிறது.

மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் மெட்ரோ ரயிலுக்கான 25 கிலோ வாட் மின் இணைப்பை பொத்தானை அழுத்தி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் கொடியசைத்ததும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை தொடங்கியது. 800 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் சென்று முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த சோதனை ஓட்டம் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் பணிமனையில் நடைபெற்றது.

முன்னதாக மெட்ரோ ரயிலின் உள்பகுதியை பார்வையிட்ட முதல்வர், ரயில் பெட்டியின் சிறப்பு அம்சங்களை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பிரேசில் பெட்டி: பிரேசிலில் உள்ள சாவ்பாலோ நகரில் மெட்ரோ ரயிலுக்கான பெட்டி தயாரிக்கப்பட்டு வருகின்றன. சோதனை ஓட்டத்தில் ஓடிய 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் பிரேசிலில் இருந்து கப்பலில் கடந்த மே மாதம் இறுதியில் சென்னை வந்தது. சென்னையில் மொத்தம் 42 மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலுக்கும் 4 பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

ஒரு பெட்டியைத் தயாரிக்க சுமார் ரூ.9 கோடி செலவாகிறது. ஒட்டுமொத்தமாக பெட்டிகள் தயாரிப்புக்கு ரூ.1471 கோடியே 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பிரேசிலில் இருந்து 9 ரயில்கள் கொண்ட 36 பெட்டிகள் சென்னை வருகிறது. மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அல்ஸ்டோம் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீசிட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மீதமுள்ள 33 ரயில்களுக்கான 132 பெட்டிகள் தயாரிக்கப்படும்.

சோதûனை ஓட்ட நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் க.ராஜாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எப்போது வரை சோதனை ஓட்டம்?

கோயம்பேடு பணிமனையில் உள்ள 800 மீட்டர் தண்டவாளத்தில் புதன்கிழமை தொடங்கிய சோதனை ஓட்டம் 8 வாரங்களுக்கு தொடரும். இதில் திருப்தி ஏற்பட்ட பின்பு, மெட்ரோ ரயில் உயர்மட்டப் பாதைக்குக் கொண்டு செல்லப்படும்.

அங்கு சுமார் 2 முதல் 3 மாதம் காலம் சோதனை ஓட்டம் நடைபெறும். இந்தச் சோதனை ஓட்டத்தின்போது மெட்ரோ ரயில் மொத்தம் 1600 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படும். இதே போன்று தற்போது தயாரிக்கப்பட்டு வரும் அனைத்து மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கும் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும்.

மூன்று நிமிடங்களுக்கு ஒரு ரயில்

சென்னை மாநகரில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதன்படி ஒரு மணி நேரத்துக்கு 24 ஆயிரம் பேர் பயணம் செய்யலாம். இதன் காரணமாக சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான், சீனாவில் நடைமுறையில் இருக்கும் ரயில்களை போல சென்னையிலும் அதிவேகத்துடன் மெட்ரோ ரயில்கள் இயங்கும். மேலும் இந்தியாவில் தில்லி, பெங்களூர், கொல்கத்தாவுக்கு மும்பைக்கு அடுத்தபடியாக சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

கோயம்பேட்டில் கட்டுப்பாட்டு அறை

சென்னையில் இயங்கும் அனைத்து மெட்ரோ ரயில்களும் கோயம்பேட்டில் தற்போது கட்டப்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே இயக்கப்படும். ரயில்கள் மட்டுமல்லாமல் மெட்ரோ ரயில் நிலையங்களும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கப்படும். இதற்கான "ஞல்ங்ழ்ஹற்ண்ர்ய் இர்ய்ற்ழ்ர்ப் இங்ய்ற்ங்ழ்' இன்னும் 4 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில் ஓட்டுநருக்கு தண்டவாளம் மற்றும் பயணிகளை கண்காணிப்பதே பிரதான வேலை. தண்டவாளத்தில் எந்த குறுக்கீடு வந்தாலும் மெட்ரோ ரயில் தானாகவே நின்றுவிடும்.

முதல் பயணம் எப்போது?

சென்னை மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் முடிந்தவுடன் 2014-ஆம் ஆண்டு மார்ச் அல்லது மே மாதம் கோயம்பேடு - பரங்கிமலை இடையிலான உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் தனது முதல் பயணத்தைத் தொடங்கும்.

இப்போது 4 பெட்டிகளுடன் இயங்கும் மெட்ரோ ரயில், பொது மக்களின் தேவை மற்றும் வரவேற்பைப் பொருத்து மேலும் 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு 6 பெட்டிகளாக இயக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்பேடு - பரங்கிமலை இடையே 8 மாடி ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், கோயம்பேடு, சி.எம்.பி.டி., (கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்) அரும்பாக்கம் ஆகிய 3 மாடி ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணி முழுமையாக முடிந்து, உட்புற வேலைப்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

மூன்று தளங்களாக அமைக்கப்படும் கோயம்பேடு பறக்கும் ரயில் நிலையத்தில் 6 நகரும் படிக்கட்டுகள் நிறுவப்பட்டுவிட்டன. லிப்ட்டுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரயிலின் சிறப்பம்சம்

* சென்னை மெட்ரோ ரயில் உயர்நிலைப் பாதை மற்றும் சுரங்கம் வாயிலாகச் செல்வதால் பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.

* தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. நடைமேடையை அடைந்தபின் ரயில் முழுவதும் நின்றபிறகே கதவு திறக்கும், மூடும்.

* அதிகபட்சம் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் இயங்கும்.

* ஒரு ரயில் தொடரில் ஆயிரத்து 276 பேர் பயணம் செய்யலாம். இதில் 176 பயணிகள் அமர்ந்தும், மீதமுள்ள ஆயிரத்து 100 பயணிகள் நின்று கொண்டும் செல்லலாம்.

* பயணத்தின்போது ஏதேனும் சேவைக் குறைபாடுகள் தென்பட்டால் ரயில் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

* லக்கேஜ்களை வைக்க தனி இடம் உள்ளது. இந்த வசதி பெங்களூரு மற்றும் கொல்கத்தா மெட்ரோக்களில் இல்லை.

* மெட்ரோ ரயில் செல்லும் வழித்தடங்களின் வரைபடம் அனைத்து பெட்டியிலும் வைக்கப்பட்டுள்ளது.

* ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் 4 சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன.

* அவசர காலத்தின்போது ஓட்டுநருக்குத் தகவல் தர சிறப்புப் பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

* பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு வகுப்பு பெட்டி உண்டு.

* ரயிலின் செயல்பாட்டை தமது அறையில் இருந்தபடியே ஓட்டுநர் கண்காணிக்கும் வசதி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com