சுடச்சுட

  
  18dPOOR

  மூத்த எழுத்தாளர் பூரணி (90) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.

  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிட்லப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.

  1913-இல் பிறந்த பூரணி, கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதி வந்தார். பூரணி - கவிதைகள், பூரணி நினைவலைகள், பூரணி சிறுகதைகள், செவிவழிக் கதைகள் போன்ற பல நூல்கள் வெளியாகியுள்ளன.

  ஹிந்தியில் புலமை பெற்ற அவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஹிந்தி கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அது நூலாகவும் வெளிவந்துள்ளது. திருப்பூர் சக்தி இலக்கிய விருது, பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பின் தங்கப் பதக்கம் உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

  மறைந்த பூரணியின் இறுதிச் சடங்கு, சிட்லபாக்கம் மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு: 2223 1879

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai