சுடச்சுட

  

  சுற்றுலா பயணிகள் பார்வையிட இடுக்கி அணை 14 முதல் திறப்பு

  By dn  |   Published on : 09th September 2013 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dam

  ஆசியாவிலேயே 2ஆவது மிகப்பெரிய அணையான இடுக்கி அணை, ஓணம் பண்டிகையொட்டி சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக செப். 14ஆம் தேதி முதல் திறந்து விடப்படுகிறது.

  இடுக்கி அணை, ஆசிய கண்டத்திலுள்ள அணைகளில் 2ஆவது மிகப் பெரிய ஆர்ச் அணையாகும். இந்த அணை 839 அடி உயரமுள்ள குறவன் மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்தி மலையையும் இணைத்து 555 அடி உயரத்தில் ஆர்ச் வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 36 ஆயிரம் ஏக்கரில், 72 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கும் வசதி உடையது. இது முல்லைப் பெரியாறு அணையை விட 5 மடங்கு கூடுதலாக தண்ணீர் தேக்கி வைக்கும் வசதி உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த அணையிலிருந்து வெளியேறும் நீரின் மூலம் மூல மட்டத்தில் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணை கேரள மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணையை பொதுமக்கள் நெருங்காமல் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கேரள அரசு, ஆண்டுக்கு இரண்டு முறை ஓணம் பண்டிகை, புத்தாண்டு தினத்தில் மட்டும் சுற்றுலா பயணிகளை பார்வையிட அனுமதிக்கிறது.

  கேரளத்தில் ஓணம் பண்டிகை ஞாயற்றுக்கிழமை துவங்கி செப். 17-ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இதில், முக்கிய ஓணமான திருவோணம் 16-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, இடுக்கி அணையை பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கள் பார்வையிடுவதற்காக செப்.14-ஆம் தேதி முதல் திறந்து விடப்பட உள்ளது.

  அணைப் பகுதிக்குள் செல்ல பெரியவர்களுக்கு ரூ. 10ம், சிறியவர்களுக்கு ரூ. 5ம், அணையில் நீர்ப்பரப்பில் 5 பேர் விரைவு படகில் சவாரி செய்ய ரூ. 300ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே அணையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai