தமிழக காவல்துறையில் 30 உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்த விவரம்:
தமிழக காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனத்தின் அடிப்படையிலும் உதவி ஆணையர்கள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இப்போது தமிழக காவல்துறையின் டி.ஜி.பி. ராமானுஜத்தின் உத்தரவின்படி 7 உதவி ஆணையர்கள் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல 23 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இவர்கள் அனைவரும் பெருநகர காவல்துறை சரகத்துக்குள்ளேயே பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.