தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூர், சென்னையில் 104 டிகிரி வெயில் வியாழக்கிழமை (ஜூன் 26) பதிவானது. புதுச்சேரியில் 103 டிகிரி வெயில் பதிவானது.
இதேபோல மதுரை, நாகப்பட்டினம், திருச்சி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
வியாழக்கிழமை பதிவான வெயில் (டிகிரி பாரன்ஹீட்டில்):
சென்னை மீனம்பாக்கம்104
வேலூர்104
சென்னை நுங்கம்பாக்கம்103
புதுச்சேரி103
மதுரை103
திருச்சி103
நாகப்பட்டினம்100
அதிராமப்பட்டினம்99
தூத்துக்குடி98.4
காரைக்கால்98.4
கடலூர்98
தருமபுரி95.3
சேலம்95
பாம்பன்94
கோவை91
தொண்டி92
வால்பாறை8
மழை... தமிழகம், புதுச்சேரி, வடக்கு, தெற்கு உள் கர்நாடகம், லட்சத்தீவு, தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் குறைந்தளவு மழைகூட பெய்யவில்லை எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.