முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் நண்பகல் 12.40 மணிக்குத் தொடங்கி, சிறிது நேரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நிதித்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, வணிக வரித் துறை ஆகிய துறைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.