பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்: கார்கள், படகுகள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) அமைப்பினரிடம்
பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்: கார்கள், படகுகள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) அமைப்பினரிடம் போலீஸார் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தில், 4 கார்கள் மற்றும் 6-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டு, வலைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

தஞ்சை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தம் சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். காலை 11 மணியளவில் மல்லிப்பட்டிணம் கடைவீதியிலிருந்து தெருக்களுக்கு செல்ல முயன்றபோது பள்ளிவாசல் அருகில் தெருவுக்குள் பிரசாரம் செய்ய செல்லக்கூடாது என எஸ்.டி.பி.ஐ. அமைப்பைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வேட்பாளரை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாரும், மல்லிப்பட்டிணம் ஜமாத்தார்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் திடீரென பிரசாரத்துக்கு வந்தவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசியெறியத் தொடங்கினர்.

இதில், வேட்பாளரின் பாதுகாப்புக்காக ஜீப்பில் நின்ற சுமார் 20-க்கும் மேற்பட்டோரும், காவல் துறையினரும் காயமடைந்தனர். இதனால், இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டு வலைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

தகவலறிந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி. தர்மராஜன் உள்பட போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கலவரம் ஏற்படாமல் தடுத்தனர். கற்களை வீசி தாக்கி விட்டு பள்ளிவாசலில் மறைந்திருந்த 30-க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ. அமைப்பினரை போலீஸார் பிடித்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com