Enable Javscript for better performance
பழனி ரோப்கார் மீண்டும் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    
    palaniropecar

    பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்புப் பணிகள் நிறைவுபெற்ற நிலையில் சனிக்கிழமை முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.

    பழனி மலைக்கோயில் ரோப்கார் கடந்த 2004-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த ரோப்கார் தினமும் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புக்காக நிறுத்தப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் பழனி கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், ஏப்ரல் 23-ஆம் தேதி ரோப்கார் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டு 3 நாள்கள் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரோப்கார் பெட்டிகளின் ரப்பர் புஷ்கள், உயர் கோபுரத்தில் உள்ள பேரிங்குகள், கீழ் மற்றும் மேல்தளத்தில் உள்ள அச்சுக்களின் உராய்வுத் தன்மை, வடக்கயிற்றின் திறன் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இப்பணிகள் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்ற நிலையில், மாதிரி எடைகள் வைத்து அதிகாரிகளால் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பணிகள் திருப்திகரமாக இருந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை ரோப்கார் பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai