Enable Javscript for better performance
செவிலியர் கல்லூரித் தாளாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விடுதி மாணவிகள் குளித்ததை மறைந்திருந்து பார்த்ததாக அளிக்கப்பட்ட புகாரில், தஞ்சாவூர் தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரித் தாளாளர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

    தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் தாளாளர் ஆர். ராவணன் (45). இவருக்கு சொந்தமாக தஞ்சாவூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் 5 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

    தஞ்சாவூர் கல்லூரிக்கான மாணவிகள் தங்கும் விடுதி, நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனியில் உள்ள தாளாளர் ராவணன் வீட்டு மாடியிலும், வீட்டின் பின்பக்கம் உள்ள கட்டடத்திலும் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் செவிலியர் கல்லூரியில் பயிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று புகார் அளித்தனர். அதில், கல்லூரியிலும், விடுதியிலும் அடிப்படை வசதிகள் இல்லை.

    கல்லூரிக்கு உரிய அனுமதியும் இல்லை. மேலும், கல்லூரி விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் போது தாளாளர் எட்டிப்பார்த்து ரசிக்கிறார். விடுதி மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என கூறியிருந்தனர்.

    புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன், புகார் குறித்து விசாரிக்க வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், கல்லூரி தாளாளர் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே முனங்காடு பகுதியைச் சேர்ந்த 17 வயது செவிலியர் பயிற்சி மாணவி தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸில் புகார் அளித்தார்.

    அதன்பேரிலும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், விசாரணை நடத்திய போலீஸார், தாளாளர் ராவணன் மீது கூறப்பட்ட புகார்களை உறுதிசெய்தனர்.

    இதையடுத்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் சனிக்கிழமை இரவு ராவணணை கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தை பாலியல் துன்புறுத்தல் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்

    பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai