சுடச்சுட

  

  உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

  கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவடைந்ததும் அந்தத் தேர்வு தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

  அதேபோல், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகையை எதிர்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு மதிப்பெண் சலுகை ரத்து செய்யப்பட்டது.

  இந்த நிலையில், ஆசிரியர் பணி நியமனத்துக்காகப் பின்பற்றப்படும் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  இந்த வழக்கு முடிந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai