சுடச்சுட

  

  ஆம் ஆத்மி பெயரில் நன்கொடை வசூல்: நடவடிக்கை கோரி போலீஸில் புகார்

  By dn  |   Published on : 14th January 2014 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆம் ஆத்மி கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடம் நன்கொடை வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

  இது குறித்து தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி செய்தியாளர்களிடம் கூறியது:-

  தமிழக ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை அமைந்தகரையில் செயல்பட்டு வந்தது. தற்போது கீழ்ப்பாக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்சியின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த நாராயணன் என்பவர் மீது அண்மையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி பொறுப்புகளில் இருந்த அவரது ஆதரவாளர்கள் பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, நஸ்ரின், அருள்தாஸ் ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  ஆனால் நாராயணன், அமைந்தகரையில் கட்சி அலுவலகம் செயல்பட்டுவந்த அதே இடத்தில் போட்டி அலுவலகமாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார். அது தவிர ஆம் ஆத்மி கட்சி பெயரைப் பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நன்கொடை வசூலித்து வருகிறார்.

  இது குறித்து கட்சி தலைமையிடத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் நாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

  இந்த புகார் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் சென்னை மாவட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் நாராயணன் கூறியது:-

  அமைந்தகரையில் செயல்பட்டு வருவது கட்சியின் மாவட்ட அலுவலகம். கீழ்ப்பாக்கத்தில் செயல்படுவது மாநில தலைமை அலுவலகம். எனவே கிறிஸ்டினா சாமி கூறுவது போல நாங்கள் போட்டி அலுவலகம் நடத்தவில்லை.

  மேலும் எங்களை கட்சியில் இருந்து நீக்கிய தகவல் கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் எங்களுக்கு தெரியப்படுத்தினார்கள். இது குறித்து கட்சி தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த பிரச்னை குறித்து விசாரிக்க கட்சி மேலிடக் குழு சென்னை வரவுள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai