சுடச்சுட

  

  பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பேரறிஞர் அண்ணா விருது: முதல்வர் அறிவிப்பு

  By dn  |   Published on : 14th January 2014 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  award

  எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் தேமுதிக அவைத் தலைவர் பதவிகளில் இருந்து அண்மையில் விலகி, தீவிர அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்கும் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனுக்கு அண்ணா விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.

  மேலும் சுலோச்சனா சம்பத், எழுத்தாளர் அசோகமித்ரன் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது வழங்கும் விழா வரும் புதன்கிழமை (ஜன. 15) சென்னையில் நடைபெறுகிறது.

  இது குறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

  தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னமலற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான நபர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம்:

  திருவள்ளுவர் விருது-கவிஞர் யூசி (தைவான்)

  தந்தை பெரியார் விருது-சுலோச்சனா சம்பத்

  அண்ணல் அம்பேத்கர் விருது-பேராயர் எம்.பிரகாஷ்.

  பேரறிஞர் அண்ணா விருது-பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்.

  பெருந்தலைவர் காமராஜர் விருது-கி.அய்யாறு வாண்டையார்.

  மகாகவி பாரதியார் விருது-கு.ஞானசம்பந்தன்.

  பாவேந்தர் பாரதிதாசன் விருது-ராதா செல்லப்பன்.

  தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது-அசோகமித்ரன்.

  முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது-வ.ஜெயதேவன்.

  விருது வழங்கும் விழா: ஒன்பது விருதுகளையும் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் வரும் புதன்கிழமை (ஜன. 15) திருவள்ளுவர் திருநாளான்று வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    விருது பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியன வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     தமிழக அரசின் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன் ஆகியோர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து விருதுகளையும் வழங்க உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai