சுடச்சுட

  

  திருச்சி: ஓராண்டுக்குள் 2 ஆயிரம் பொது பயன்பாட்டு சைக்கிள்கள்

  By dn  |   Published on : 24th January 2014 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி நகரில் ஓராண்டுக்குள் 2,000 சைக்கிள்கள் மக்களின் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வி.பி. தண்டபாணி தெரிவித்தார்.

  கருத்தரங்கில் மேலும் அவர் கூறியது: வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் திருச்சி நகரில் மொத்தம் 24 கி.மீ. தூரத்துக்கு அதிவிரைவு பஸ் வழித்தடம் அமைக்கப்படும். ஸ்ரீரங்கத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் வழியாக மத்திய பஸ் நிலையம் வரையில் 17 கி.மீ.க்கும், மத்திய பஸ் நிலையம் முதல் கே.கே. நகர் வரையில் 7 கி.மீ. தூரத்துக்கும் இந்த அதிவிரைவு வழித்தடம் அமைக்கப்படும். மொத்தம் 52 கி.மீ. தூரத்துக்கு சாலைகளில் நடைபாதைகள் மற்றும் 28 கி.மீ. தூரத்துக்கு சைக்கிள்களுக்கான தனி வழிகள் அமைக்கப்படும். 11 கி.மீ. தூரத்துக்கு பசுமை வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும். மேலும் 66 இடங்களில் பொது சைக்கிள் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 81 இடங்களில் தெருவோர வியாபார மண்டலங்கள் உருவாக்கப்படும். இப்போது திருச்சியில் 218 அரசு பஸ்களும், 200 தனியார் பஸ்களும் இயங்குகின்றன. வரும் 2018-ஆம் ஆண்டில் கூடுதலாக 341 பஸ்கள் வாங்கப்படவேண்டும்.

  இந்த திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 655 கோடி தேவைப்படும். அடுத்த ஓராண்டுக்குள் 23.2 கி.மீ. தூரத்துக்கு நடைபாதைகளும் 10.7 கி.மீ.-க்கு சைக்கிள் வழித்தடங்களும் அமைக்கப்படும். ஸ்ரீரங்கம் மற்றும் டி.வி. கோயில் பகுதிகள் பாதசாரிகள் மண்டலமாக மாற்றப்படும். இந்த ஓராண்டுக்குள் 24 கி.மீ.-க்கு அதிவிரைவு பஸ் வழித்தடம் அமைக்கப்பட்டு விடும். மேலும் 66 பொது சைக்கிள் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 2,000 சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். இதற்கு ரூ. 150 கோடி தேவை என்று தெரிவித்தார் வி.பி. தண்டபாணி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai