சுதந்திரப் போராட்ட தியாகி நீலமேகம் பிள்ளை காலமானார்

மதுரையில் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் சேர்ந்து நாட்டுக்காகப் போராடி சிறை சென்ற சுதந்திரப் போராட்டத் தியாகி நீலமேகம் பிள்ளை (93) கடந்த 8-ஆம் தேதி காலமானார்.

மதுரை கனகவேல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம் பிள்ளை. தொழிற்சங்கத்தில் பணியாற்றிய இவர், தமது 21-ஆவது வயதில், 1942-ஆம் ஆண்டில் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று சிறையில் இருந்தார்.

அவரது மனைவி மயிலம்மாள் காலமாகி விட்டார். மகன் பிச்சைமணி மற்றும் 3 பேத்திகள் உள்ளனர்.

தான் இறந்ததும், மருத்துவக் கல்லூரி ஆய்வுக்கு பயன்படும் வகையில் தனது உடலைத் தானம் செய்யுமாறு தியாகி நீலமேகம் பிள்ளை எழுதி வைத்திருந்தார். இந் நிலையில், செவ்வாய்க்கிழமை அவர் காலமானார். அவரது பேத்திகளான காயத்ரிதேவி, தாமரைச்செல்வி, பூமாராணி ஆகியோர் தியாகி நீலமேகம் பிள்ளையின் உடலை, மதுரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு கழக இயக்குநர் மற்றும் பேராசிரியரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com