Enable Javscript for better performance
தமிழ்ப் பல்கலை.யில் கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ.15 கோடி அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் பல்கலை.யில் கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ.15 கோடி அனுமதி

    By dn  |   Published on : 26th July 2014 04:47 AM  |   அ+அ அ-   |    |  

    book

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இரு கட்டடங்கள் கட்டுவதற்காகத் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ரூ.15 கோடி நிதி அனுமதித்து அறிவித்தார்.

    இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை தெரிவித்தது:

    இந்தப் பல்கலைக்கழகத்தில் 19,805 சதுர அடியில் ஒரு கட்டடமும், 30,018 சதுர அடியில் மற்றொரு கட்டடமும் கட்டப்படும். இக்கட்டடங்களுக்குப் பெருந்தொகையாக ரூ.15 கோடி வழங்கியதன் மூலம் தமிழ்ப் பல்கலைக்கழகப் பெருந்திட்ட வரைபட நோக்கம் நிறைவேற வாய்ப்புள்ளது. இது, இந்தப் பல்கலைக்கழகத்தின் முப்பதாண்டு கனவு. இதை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    பல்கலைக்கழகத்தின் நூலகத்தை மையமாக வைத்து, சுற்றிலும் த,மி,ழ்,நா,டு என்ற ஐந்து கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் எனப் பெருந்திட்ட வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ள இப்பெரும் நல்கை மூலம் 50,000 சதுர அடி பரப்பளவுக்கு இரு கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும்போது பல்கலைக்கழகத்தின் இடத்தேவைகள் முற்றிலும் நிறைவடைந்துவிடும்.

    19,805 சதுர அடியில் கட்டப்படும் "த' வடிவக் கட்டடம் சிற்பக்கலை, கட்டடக்கலை, இசைக்கலை, நாடகக்கலைத் துறைகள் அடங்கிய கலைப் புலத்தின் துறைகளுக்கும், பொதுத் தேவைக்கும் பயன்படுத்தப்படும். 30,018 சதுர அடியில் கட்டப்படும் "நா' வடிவக் கட்டடத்தில் சுவடிப் புலத்தின் கீழ் செயல்படும் ஓலைச்சுவடி துறை, அரிய கையெழுத்துச் சுவடி துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, நீரகழாய்வுத் துறை ஆகிய துறைகள் செயல்படுவதற்கான வாய்ப்புள்ளது என்றார் அவர்.

    ஏற்கெனவே "ழ்' வடிவக் கட்டடம் 1989-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, அதில் மொழிப்புலம் செயல்பட்டு வருகிறது. மேலும், "மி' வடிவக் கட்டடக் கட்டுமானப் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, இப்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இதில், அறிவியல் துறைகள் கொண்டுவரப்படவுள்ளன. மேலும், "டு' வடிவக் கட்டடம் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp