தொல்காப்பியத்தில் தமிழ் இலக்கியத்தின் வேர்கள்: க. நெடுஞ்செழியன்

எந்த வேர்களைத் தேடுவது, எங்கு தேடுவது என்பது சிரமமான காரியம்தான்.
தொல்காப்பியத்தில் தமிழ் இலக்கியத்தின் வேர்கள்: க. நெடுஞ்செழியன்

எந்த வேர்களைத் தேடுவது, எங்கு தேடுவது என்பது சிரமமான காரியம்தான்.

இந்தியச் சிந்தனைகளின் வரலாற்றை ஆராய்ந்து அறிய வேண்டும். தமிழ் இலக்கியத்தின் வேர்கள் தொல்காப்பியத்திலிருந்து தொடங்குகின்றன என்றார் பேராசிரியர் க. நெடுஞ்செழியன்.

தொல்காப்பியம் ஒரு மொழிக்கான இலக்கண நூலா, இல்லை. அது தமிழர் வாழ்வியலின் வெளிப்பாடு, தமிழர் போற்றி வளர்த்த அறிவியல் மரபின் காலப் பெட்டகம். வேறு எந்த மொழியில் இருந்தும் கடன் பெறாத தமிழ் அறிவுக் களஞ்சியம்.

அணுக் கோட்பாட்டையும், தருக்கவியலையும் உள்ளடக்கிய ஓர் அறிவியல் பள்ளி. அதுதான் அதன் சிறப்பு ஆகும். தமிழர் மெய்யியல்கள் வேதநெறிகளுக்கு எதிரானவை. இந்திய மெய்யியல் வரலாற்றில் தனிப் பெரும் இடம் பெற்றவர் பக்குடுக்கை நன்கணியார் ஆவார். சங்கப் புலவரான இவர் பாலி, பாகத மொழிகளில் உள்ள பெüத்த, சமண இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

புத்தர், மகாவீரர் ஆகியோரின் சமகாலத்தவராகவும், அவர்களைவிட மூத்தவராகவும் இருந்துள்ளார். இந்தியா முழுவதும் அவருக்கு மாணவர்கள் இருந்தனர். பக்குடுக்கையார் ஏழு பொருள்கள் குறித்து விளக்குகிறார். நிலம், நீர், வளி, உயிர், இன்பம், துன்பம், தீ ஆகியவை குறித்து பக்குடுக்கையார் விளக்கி உள்ளார்.

மனத்தைத் தூய்மையாக்குவதிலும், அறிவு வேட்கையிலும்தான் அறிவைப் பெறும் வாயில் அமைந்துள்ளது. மனதை தூய்மையாக்காமல் அறிவு வேட்கையிருந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை. நற்செயல்களைச் செய்வதின் மூலமே மனதைத் தூய்மைப்படுத்த முடியும். தமிழ் இலக்கியத்தின் வேர்கள் தொல்காப்பியத்தில் இருந்தே தொடங்குகின்றன.

வேதங்களில் இருந்து இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும். பக்குடுக்கையார் கூறும் அணுக் கோட்பாட்டில் இடம் பெறும் ஏழு பொருள்களில் முதல் நான்கும் அணுவியலை அடிப்படையாகக் கொண்ட 4 பூதங்களாகும், மீதி மூன்றும் மனித வாழ்வோடு தொடர்புடைய உயிர், இன்பம், துன்பம் முதலியனவாகும். உங்கள் அடையாளம் என்பது மனித நேயத்தை வெளிப்படுத்துவதாகும். தமிழ் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்பதே பொருளாகும்.

தமிழைப் போற்றிப் பாதுகாக்கும் தினமணியின் முயற்சிக்கு பாராட்டுகள் என்றார் நெடுஞ்செழியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com