சுடச்சுட

    

    அறந்தாங்கியில் முன்னாள் எம்எல்ஏ மனைவியிடம் 13 பவுன் சங்கிலி பறிப்பு

    By dn  |   Published on : 01st March 2014 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ ப. அரசன் மனைவியிடம் வியாழக்கிழமை இரவு 13 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே சித்தக்கண்ணியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ப. அரசன். இவர் தனது மனைவி கல்யாணியுடன் (53) மறமடக்கியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, அறந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து சித்தக்கண்ணி செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறியுள்ளனர்.

    அப்போது, கல்யாணியின் கழுத்தில் இருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்.

    இதுகுறித்து அரசன் அளித்த புகாரின்பேரில், அறந்தாங்கி காவல் ஆய்வாளர் சு. முருகவேல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai