சுடச்சுட

    

    "ஆரோவில்' உருவான தினம் கொண்டாட்டம்: வெளிநாட்டினர் குவிந்தனர்

    By dn  |   Published on : 01st March 2014 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    arora

    புதுவை அடுத்துள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தின் 46 ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்ச்சியாக தியான மண்டபம் அருகே நெருப்பு மூட்டி (போர்ன் ஃபயர்) வெளிநாட்டினர் பலர் தியானம் செய்தனர்.

    புதுவை அருகே ஆரோவில் சர்வதேச நகரம் மகான் அரவிந்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அன்னை மீரா அல்போன்ஸாவின் கனவு நகரமாக 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

    அனைத்து நாடுகளுக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் பல்வேறு நாடுகளின் மண்ணை சேகரித்து திறந்தவெளி கலையரங்கின் நடுவே ஒரு மலர்மொக்கு வடிவ அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது. அருகில் மாத்ரி மந்திர் என்றழைக்கப்படும் தியான மண்டபமும் உள்ளது. இதுதவிர இயற்கையை பேணி காக்கும் வகையில் தாவரவியல் பூங்கா போன்ற பல இடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நகரம் உருவாகி 46-வது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கொண்டாடப்பட்டது. இதில் ஆரோவில்வாசிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் மாத்ரி மந்திர் அருகேயுள்ள "ஆம்பி தியேட்டர்' எனப்படும் திறந்தவெளி கூட்ட அரங்கில் குவிந்தனர். காலை 5.30 மணிக்கு சூரியன் உதயமானதும் அரங்கை பூக்களால் அலங்கரித்தும், நெருப்பு மூட்டியும் (போர்ன் ஃபயர்) தியானத்தில் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai