சுடச்சுட

  

  ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்பு?: ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் சஸ்பெண்ட்

  By dn  |   Published on : 01st March 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ips_sampathkumar

  திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

  இதற்கான உத்தரவை அரசு உள்துறை செயலர் அபூர்வ வர்மா வியாழக்கிழமை வெளியிட்டார். ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை செயலர் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திருச்சியை தலைமையகமாகக் கொண்டு பணியாற்றி வந்த சம்பத்குமார், அங்கிருந்து அனுமதியின்றி வெளியேறக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக பணியாற்றுவதற்கு முன்பு க்யூ பிரிவு கண்காணிப்பாளராக சம்பத்குமார் பொறுப்பு வகித்தார். அப்போது போலி பாஸ்போர்ட் வழக்கு ஒன்றின் மீது அவர் மேற்கொண்ட விசாரணையில், சென்னையில் ஐ.பி.எல்.சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்சிங் நடைபெற்ற விவரம் தெரிய வந்தது.

  இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்ட சம்பத்குமார், 168 தரகர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் காவல்துறை இயக்குநரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதன் பின்னர் அந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

  இந்நிலையில் ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம், நீதிபதி முத்கல் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது.

  அந்த கமிட்டி முன்பாக தனது விசாரணை தகவல்களை வெளியிட்ட சம்பத்குமார், ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்புடைய நபர்களிடம் சிபிசிஐடி போலீஸார் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். முக்கிய பிரமுகர்கள் பலருக்கு சூதாட்டத்தில் தொடர்பு உள்ளதாகவும், ஆனால் 13 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பத்குமார் தெரிவித்தார் .

  மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வு மையம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கிடையே சூதாட்டத் தரகராக கருதப்படும் முக்கியப் புள்ளி ஒருவருடன் சம்பத்குமாருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாக புகார் எழுந்தது.

  இது குறித்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சம்பத்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai