சுடச்சுட

    

    கொதிக்கும் நெய்யில் கையைவிட்டு அப்பம் சுட்ட மூதாட்டி!

    By dn  |   Published on : 01st March 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    svlKoil

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரி விழாவையொட்டி கொதிக்கும் நெய்யில் கையை விட்டு பிரசாதத்துக்காக அப்பம் சுட்டார் மூதாட்டி முத்தம்மாள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மான் கோயில் உள்ளது. சிவராத்திரியையொட்டி, இக் கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து குல தெய்வத்தைக் கும்பிட வரும் பக்தர்களுக்கு ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்த முத்தம்மாள் (80) கொதிக்கும் நெய்யில் கரண்டியைப் பயன்படுத்தாமல், கையைவிட்டு அப்பம் சுட்டு பல ஆண்டுகளாக பிரசாதமாக கொடுத்து வருகிறார்.

    இந்த ஆண்டும் வியாழக்கிழமை நள்ளிரவில் சிவராத்திரி விழாவையொட்டி, கோயிலின் முன் முத்தம்மாள் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் கொடுத்த நெய்யை சட்டியில் ஊற்றி, கொதிக்க வைத்து முத்தம்மாள் கையைவிட்டு அப்பங்களை சுட்டு எடுத்தார். நள்ளிரவு தொடங்கிய இந் நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது.

    முத்தம்மாள் சுட்டெடுத்த அப்பம் காலையில், பத்ரகாளியம்மனுக்கு படைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பக்தர்களுக்கு அப்பம் பிரசாதமாக வழங்கப்பட்டது. கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சியை தான் சுமார் 45 ஆண்டுகளாகச் செய்து வருவதாக முத்தம்மாள் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai