சுடச்சுட

    

    சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது தொடர்பான விவகாரம்: இடைக்காலத் தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

    By dn  |   Published on : 01st March 2014 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hc

    சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்து அதன் ஊழியர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.சந்தானம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் எடுத்த முடிவு அதிகாரத்துக்கு புறம்பானது. இது இந்திய விமான நிலைய ஆணையச் சட்டம் 1994-ஐ மீறுவதாகும்.

    தனியார்மயமாக்குவது தொடர்பாக, விமான நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துவது, செயல்படுத்துவது மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தம் கோருவதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.

    மேலும், விமான நிலைய வளாகத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட முடியுமே தவிர, விமான நிலையம் முழுவதும் மற்றும் அதன் செயல்பாடுகளை தனியார்மயமாக்குவதற்கு அனுமதிக்கவில்லை.

    இது தவிர விமான நிலைய ஊழியர்களுக்கான பாதுகாப்பு, உரிமை, அவர்களுடைய ஊதியம், பதவி உயர்வு உள்பட ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்து பிரிவு 18-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார்மயமாக்குவதன் மூலம் ஊழியர்கள் அனைத்து விதத்திலும் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே உள்ள ஊழியர்கள் தனியார்மயமாக்குவதற்கு கட்டாயப்படுத்தப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் தனியாருக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

    இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வியாழக்கிழமை (பிப்.27) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் வி.பிரகாஷ் ஆஜரானார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், மத்திய அரசு வழக்குரைஞர் ஆர்.மகேஸ்வரி கூடுதல் பதில் மனு தாக்கல் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 29-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 5-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai