சுடச்சுட

    

    சோனியா, மன்மோகன் மீது ராமேசுவரம் காவல் நிலையத்தில் புகார்

    By dn  |   Published on : 01st March 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக மீனவர்களை தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க முன் வராததற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் நான்கு அமைச்சர்கள் மீது கச்சத்தீவு மீட்புக் குழுவினர் ராமேசுவரம் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் கச்சத்தீவு மீட்புக் குழு தலைவர் சென்னையை சேர்ந்த சீதையின்மைந்தன் என்பவர், ராமேசுவரம் வந்தார்.

    தமிழக மீனவர்களை பாதுகாக்கத் தவறியதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சல்மான்குர்ஷித், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ராமேசுவரம் கோயில் காவல் நிலைய ஆய்வாளர் ஞானராஜிடம் அவர் புகார் கொடுத்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai