சுடச்சுட

    

    தமிழகத்தில் உள்ள 5 லட்சம் சிலைகளை படம் எடுக்க வேண்டும்: இந்து சமய அறநிலையத் துறையிடம் போலீஸார் வலியுறுத்தல்

    By dn  |   Published on : 01st March 2014 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழத்தில் சிலை திருட்டைத் தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறையிடம் இருக்கும் 46 ஆயிரம் கோயில்களில் உள்ள 5 லட்சம் சிலைகளை படம் எடுக்க வேண்டும் என போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து பொருளாதார தடுப்புப் பிரிவு ஏடிஜிபி பிரதீப் வி.பிலிப், சிலை தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆகியோர் நிருபர்களுக்கு சென்னையில் அளித்த பேட்டி:

    தமிழகத்தில் கோயில்களில் மொத்தம் 28 சிலைகள் திருடுபோயுள்ளன. இவற்றில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருடுபோன விநாயகர் சிலை மட்டும் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 27 சிலைகளும் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களிலும், கலைப்பொருள் சேகரிப்போரிடமும் உள்ளன.

    அவற்றை தற்போது மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

    இதற்காக அந்தந்த நாட்டு அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். முதல் கட்டமாக அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து 3 சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமம் பிரகதீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட சுமார் 100 கிலோ எடையுள்ள நடராஜர் சிலையையும், நியூ சௌத் வேல்ஸ் நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சிலைத் திருட்டு கும்பலின் தலைவராக செயல்பட்ட சுபாஷ் சந்திர கபூர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் 3 பேர் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    5 லட்சம் சிலைகளின் புகைப்படம்: அதே நேரத்தில், எதிர்காலத்தில் சிலைத் திருட்டை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் 45 ஆயிரம் கோயில்களில் உள்ள சுமார் 5 லட்சம் சிலைகளின் புகைப்படங்களை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.

    இதேபோல உலோக சிலைகளின் பின்புறம் கோயில், ஊர், தமிழக அரசுக்குச் சொந்தமானது என எழுத வேண்டுமென அறநிலையத்துறையிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai