சுடச்சுட

    
    suspended_arun

    தேமுதிகவின் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் அருண் சுப்பிரமணியம் நீக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    தேமுதிகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த மு.அருண்சுப்பிரமணியன், அவர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் விடுவிக்கப்படுவதாக விஜயகாந்த் கூறியுள்ளார்.

    தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அருண்சுப்பிரமணியம் வியாழக்கிழமை (பிப்.27) சந்தித்து, தொகுதி பிரச்னை தொடர்பாகப் பேசினார்.

    இந்நிலையில் கட்சி பதவியிலிருந்து அருண்சுப்பிரமணியத்தை நீக்கம் செய்து விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai