சுடச்சுட

    

    நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ரூ. 9,344 வரை ஊதிய உயர்வு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

    By dn  |   Published on : 01st March 2014 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya

    நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ. 9,344 வரை ஊதிய உயர்வு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    தமிழகத்தில் உள்ள 120 நகர கூட்டுறவு வங்கிகள், ரூ. 9,278 கோடிக்கும் அதிகமாக வணிகம் செய்து வருகின்றன. இவ்வங்கிப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 27-11-2011-ல் முடிவடைந்துள்ளது.

    தொடர்ந்து 5 ஆண்டுகள் லாபம் ஈட்டி, ரூ. 100 கோடிக்கு மேல் வாணிபம் செய்யும் 27 நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.

    தொடர்ந்து 5 ஆண்டுகள் நிகர லாபம் ஈட்டி ரூ. 50 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வணிகம் செய்யும் 37 வங்கிகளின் பணியாளர்களுக்கு 15 சதவீதமும், தொடர்ந்து 5 ஆண்டுகள் நிகர லாபம் ஈட்டி, ரூ. 50 கோடி வரை வாணிபம் செய்யும் 42 வங்கிகளின் பணியாளர்களுக்கு 10 சதவீதமும் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

    இந்த ஊதிய உயர்வு 1-1-2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும். சில ஆண்டுகள் லாபம் ஈட்டி குவிந்த நஷ்டத்துடன் இயங்கும் 14 வங்கிகளின் பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையின்றி வழங்கப்படும்.

    நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு 1-1-2012-ல் இருந்த 4,443 நுகர்வோர் குறியீட்டுப் புள்ளிகளில் 2,836 புள்ளிகள் சம்பளத்துடன் இணைக்கப்படும்.

    1-1-2012 அன்று 60.15 சதவீதம் அகவிலைப்படி வழங்குவதுடன், ஒவ்வொரு காலாண்டில் 4 விலைப்புள்ளிகளுடன் 0.15 சதவீதம் அகவிலைப்படி என்ற அளவிலான உயர்வு அனைத்து நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.

    இதன் மூலம் ரூ. 419 முதல் அதிகபட்சமாக ரூ. 9,344 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். இதனால் நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 13.33 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai