சுடச்சுட

  
  fisherman

  அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதைச் தடை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமும் அதனையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தினர்.

  தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சி.ஐ.டி.யூ. அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் பா.கருணாநிதி தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாலர் சி.ஆர்.

  செந்தில்வேல் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி வரவேற்றார்.

  ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள்

  சுப்பிரமணியன் (தஞ்சாவூர்), ராமநாதன் (புதுக்கோட்டை), முத்துராமன் (திருவாரூர்) நாகராஜ், முருகையன், கரிகாலன் (நாகப்பட்டினம்) உள்பட 5 மாவட்டங்களின் நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க முக்கிய நிர்வாகிகள் சென்றபோது அனைத்து மீனவர்களும் திரண்டு தாங்களும் வருவோம் என கூச்சலிட்டதுடன், ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி. வெள்ளைத்துரை, டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, மீனவர்களைச் சந்திக்க மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.விஸ்வநாதன் நேரில் வந்து அவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  அதிகாரிகளிடம் மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிக குதிரைத்திறன் கொண்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடிப்பதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும், விசைப்படகுகள் கரையோரத்தில் மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றனர்.

  மீனவர்கள் புகார்களை கேட்டுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.விஸ்வநாதன் ஆட்சியரிடம் இதுகுறித்து தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.விரைவில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோரைப்

  பிடிக்க தனியாக கடலோரக் காவல்படை, உள்ளூர் போலீஸார், மீன்வளத் துறை ஆகியோரைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai