Enable Javscript for better performance
பேரிச்சம்பழம் இறக்குமதி செய்வதாகக் கூறி ரூ. 4 கோடி மோசடி: 5 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பேரிச்சம்பழம் இறக்குமதி செய்வதாகக் கூறி ரூ. 4 கோடி மோசடி: 5 பேர் மீது வழக்கு

    By dn  |   Published on : 01st March 2014 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரிச்சம்பழம் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி பழ வியாபாரி ஒருவரிடம் ரூ. 4 கோடி வரை மோசடி செய்ததாக, இரு பெண்கள் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கூறியது:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பத்ரகாளியம்மன் கோவில் சாலையைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் அரபு நாடுகளில் இருந்து பேரிச்சம்பழம் இறக்குமதி செய்து அவற்றை தமிழகத்தில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார். தனது திட்டம் குறித்து விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த தனது நண்பரான கண்ணன் (32) என்பவரிடம் கலந்தாலோசித்துள்ளார். கண்ணன், அவரது நண்பரான அசோக் என்பவருக்கு பேரிச்சம்பழம் இறக்குமதி செய்யும் உரிமம் உள்ளதாகவும், அவர் மூலமாக பேரிச்சம்பழம் இறக்குமதி செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து ரூ. 4.75 கோடி பணத்தை அசோக்கின் வங்கிக் கணக்கில் சரவணன் செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள், பதிலாக ரூ. 75 லட்சம் அளவுக்கு மட்டுமே பழம் இறக்குமதி செய்தனராம்.

    இந்நிலையில் சில நாள்களுக்கு முன் சரவணன் நேரில் சென்று விசாரித்தபோது கொலை மிரட்டல் விடுத்தனராம்.

    இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரிடம் கடந்த வாரம் சரவணன் புகார் அளித்தார். காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார், கண்ணன், அவரது மனைவி, அசோக், அவரது மனைவி, அசோக்கின் நண்பர் மாரிசெல்வன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai