சுடச்சுட

    

    தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்துக்கு 5 புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

    திருத்தி அமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என். தினகர், கடந்த ஜனவரி 27-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.

    தற்போது மாநில சட்ட ஆணையத்துக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி. சுதந்திரம், ஓய்வுபெற்ற சட்டத்துறை கூடுதல் செயலர் ஆர். விவேகானந்தன் ஆகியோர் முழுநேர உறுப்பினர்களாகவும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஆர். தயாளன், ஆர். முனிரத்தினம் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாகவும், ஓய்வுபெற்ற சட்டத் துறை கூடுதல் செயலர் ஆர். கதிர்வேல் முழுநேர உறுப்பினர் மற்றும் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai