சுடச்சுட

    

    திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம், மார்ச் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது.

    திமுக கூட்டணியில் தற்போது விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

    திமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு பலமுறை கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

    இதற்கு விஜயகாந்த் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

    காங்கிரஸýடன் கூட்டணி அமைப்பதற்குத் திமுக தயாராக இல்லை. இதனால் தற்போது உள்ள கட்சிகளுடனே கூட்டணி அமைத்து, திமுக போட்டியிடத் தயாராகி வருகிறது.

    இந்நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்தக் குழுவில் துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம், வழக்குரைஞர் அணிச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உள்ளனர். இந்தக் குழுவினர் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்ய உள்ளனர்.

    வேட்பாளர் அறிவிப்பு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும் இதர கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட உள்ளது. திமுக 35 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

    கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்த பிறகே, மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai