சுடச்சுட

    

    ஊதியஉயர்வு கோரி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து 8-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயங்கிவரும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் 80 சதவீத கூலிஉயர்வு கேட்டு பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ÷இதையடுத்து தொழில்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து 8-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ÷சென்னையில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர். எனவே அக்கூட்டத்திற்கு பிறகே, ஊதியஉயர்வு கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படலாம் என கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் குமாரசாமி தெரிவித்தார்.÷கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்றுவரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக சுமார் ரூ. 250 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai