Enable Javscript for better performance
6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    
    tn_logo

    ஆறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

    இது குறித்து, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

    அணில் மேஷ்ராம்-கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநர் (வேளாண் வர்த்தகத் துறை இயக்குநர்)

    எஸ்.மலர்விழி-வணிகவரிகள் துறை இணை ஆணையாளர்-நிர்வாகம் (சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இயக்குநர்)

    அஜய் யாதவ் (ஜூனியர்)-வணிகவரிகள் இணை ஆணையாளர்-கோவை (துணை ஆட்சியர்-நாமக்கல் மாவட்டம்)

    ஆர்.பழனிசாமி-தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் (கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர்)

    வி.சாந்தா-சேலம் ஸ்டார்ச் தயாரிப்பு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையாளர், கோவை)

    மகேசன் காசிராஜன்-செய்தித் துறை இயக்குநர், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை கூடுதல் செயலாளர் (தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் நிர்வாக இயக்குநர்)

    மகேசன் காசிராஜனுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை ஜெ.குமரகுருபரன் கவனித்து வந்தார். அவருக்கு புதிதாக பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. மேலும், தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பை, தொழில் துறை செயலாளர் சி.வி.சங்கர் கூடுதலாக கவனிப்பார் என்றும் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai