சுடச்சுட

  

  உரிய சான்றுகளை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்களுக்கு வலியுறுத்தல்

  By dn  |   Published on : 02nd March 2014 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர சரிபார்ப்புக்காக உரிய சான்றினை சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

  இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி:

  சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் நபர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தாங்கள் உயிருடன் உள்ளதற்கான ஆதார சான்றினை கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்) அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். நேரில் வர இயலாதவர்கள் அரசு பதிவு பெற்ற அலுவலர் கையொப்பமிட்ட உயிர் சான்று மற்றும் மருத்துவச் சான்றுடன் ஓய்வூதிய கொடுப்பாணையை இணைத்து அஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

  தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே அஞ்சல் முறையில் சான்றுகள் அனுப்ப முடியும். நான்காவது ஆண்டில் கண்டிப்பாக ஓய்வூதியதாரர் நேரில் வர வேண்டும்.

  உரிய காலத்தில் சான்றுகள் சமர்ப்பிக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தி வைக்கப்படும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai