சுடச்சுட

  

  காங்கிரஸ் அலுவலக தாக்குதல் சம்பவம் தொடரக் கூடாது: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்

  By dn  |   Published on : 02nd March 2014 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vasan

  காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் மீது கடந்த புதன்கிழமை நடத்திய தாக்குதல் சம்பவம் இனிமேலும் தொடரக் கூடாது என மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சனிக்கிழமை சென்னையில் தெரிவித்தார்.

  இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் வாசன் கூறியது:

  இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பழ.நெடுமாறன் உள்ளிட்டோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக ஜனநாயகம், அரசியல் பண்பாடு, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்டவை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

  இந்த நல்ல பண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இச்சம்பவம் நடைபெற்றுவிட்டது. எனவே, இது மீண்டும் தொடராமல் இருக்க தத்தமது கட்சிகளைச் சார்ந்த தொண்டர்களுக்கு இக்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில் இக்கட்சிகளை பொதுமக்களே புறக்கணிக்கும் நிலை நிச்சயம் ஏற்படும் என்றார் வாசன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai