சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே முக்கொம்பிலுள்ள காவிரி ஆற்றில் சனிக்கிழமை குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    திருச்சி காஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுதர்சன் (17). சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த சகாய புஷ்பராஜ் மகன் சாம்சன் ஜெகநாதன் (16). இவர்கள் இருவரும் திருச்சி பாலக்கரையிலுள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர்.

    இந்நிலையில், சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் இவர்கள் தங்களுடன் படிக்கும் முத்து (16), வேல்முருகன் (16), பூபதிராஜ் (16) ஆகியோருடன் முக்கொம்புக்கு சென்று அங்குள்ள நடுக் காவிரி ஆற்றில் குளித்தனர்.

    அப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற சுதர்சனும், சாம்சன் ஜெகநாதனும் நீரில் சிக்கிக் கொண்டு போராடினர்.

    தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் மற்றும் திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீரில் சிக்கிய இருவரையும் மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதையடுத்து அவர்களின் சடலத்தை மீட்ட போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai