சுடச்சுட

    
    nswamy

    மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதேச நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியது: கூட்டணி தொடர்பாக, தமிழகத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் புதுவையிலும் பலமான கூட்டணி அமையும்.

    பாஜக-பஸ்வான் சந்தர்ப்பவாத கூட்டணி: பாஜக - ராம்விலாஸ் பாஸ்வான் இடையே சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்துள்ளது. மதச்சார்பின்மை கொள்கைகளை பேசிவந்த பாஸ்வான், மதவாத பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். ராகுல்காந்தி பிரசாரத்தை பாஜக கேலி செய்து வருகிறது. ஆனால், வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    புதுச்சேரியில், காங்கிரஸ் ஆட்சியில் ஏற்கெனவே இருந்த நலத் திட்டங்களை என்ஆர் காங்கிரஸ் அரசு நிறுத்திவிட்டு தற்போது தேர்தலுக்காக அவற்றை மீண்டும் செயல்படுத்தி வருகிறது. அமைச்சர்கள், வாரியத் தலைவர்களுக்கு எந்த அதிகாரத்தையும் முதல்வர் ரங்கசாமி வழங்காமல் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன்னிடமே வைத்துள்ளார். மத்திய அரசிடம் திட்டங்களை முறையாக சமர்ப்பிக்காமல், நிதி ஒதுக்கவில்லை எனக் குறை கூறி வருகிறார். ஆனால் மத்திய அரசு பாரபட்சமின்றி நிதி ஒதுக்கி உள்ளது என்றார் நாராயணசாமி.

    நிர்வாகிகள் கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எதிர்க் கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai