சுடச்சுட

    

    திருவட்டாறு அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்ட மேடை உடைப்பு

    By dn  |   Published on : 02nd March 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே ஆற்றூரில் நாம் தமிழர் கட்சியினர் அமைத்திருந்த பொதுக்கூட்ட மேடை மற்றும் கொடிக்கம்பங்களை காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இரு எம்எல்ஏக்கள் உள்பட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆற்றூர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் சனிக்கிழமை மாலையில் பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்று விழாவுக்கு நகரத் தலைவர் ஜான்பிரசாத் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதற்கு காவல் துறையினரின் அனுமதி பெறப்பட்டு வாகனப் பிரசாரமும் செய்யப்பட்டது.

    இந்நிலையில், அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த தங்களுக்கு அனுமதி வேண்டும் என, காங்கிரஸ் கட்சியினர் திருவட்டாறு காவல் நிலையத்தில் கேட்டனர். ஆனால், போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.

    இதற்கிடையே, அப்பகுதியில் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியினர் செய்திருந்தனர்.

    அப்போது குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ், கிள்ளியூர் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜான் ஜேக்கப் ஆகியோர் தலைமையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 500 பேர் அங்கு திரண்டனர்.

    இவர்கள் திடீரென ஊர்வலமாகச் சென்று நாம் தமிழர் கட்சினர் அமைத்திருந்த மேடையை அடித்து, உடைத்து அங்கிருந்த இருக்கைகளைத் தூக்கி வீசினர். மேலும், அக் கட்சியினர் அமைத்திருந்த கொடிமரத்தையும் உடைத்து சேதப்படுத்தினர். சீமான் படம் கொண்ட பிளக்ஸ் போர்டுகளையும் உடைத்து எறிந்தனர். இதனால் அப் பகுதி போர்க்களம்போல் காட்சியளித்தது. பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

    நாம் தமிழர் கட்சியினரும் திரண்டனர்: இச் சம்பவம் பற்றி அறிந்ததும் பல்வேறு இடங்களிலிருந்தும் நாம் தமிழர் கட்சியினர் ஆற்றூருக்குத் திரளாக வந்தனர். இதனால் பிரச்னை தீவிரமடைந்தது. எனவே, போலீஸார் காங்கிரஸ் கட்சியினரை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அத்துடன் ஆற்றூர் சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இந்த சம்பவத்தையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் திருவட்டாறு காவல் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநிலச் செயலர் கல்யாணசுந்தரம் அளித்த புகாரின்பேரில், எம்.எல்.ஏ.க்கள் ஜான் ஜேக்கப், பிரின்ஸ் உள்பட காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் மீது 7 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai