சுடச்சுட

    

    திருவள்ளுவர் பல்கலை கீழுள்ள கல்லூரிகளில் விதிகளை பின்பற்றாமல் பேராசிரியர்கள் நியமனம்

    By dn  |   Published on : 02nd March 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் (யுஜிசி) கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் விதிகளை பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட பேராசியர்கள் மற்றும் இதர ஊழியர்களின் தகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக பேராசிரியர் இளங்கோவன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் யுஜிசியின் விதிகள்படி பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, யுஜிசி விதிகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

    இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை (பிப்ரவரி 26) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், யுஜிசி விதிகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட பேராசிரியர் மற்றும் இதர பணியாளர்கள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழு 2 வாரத்துக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், யுஜிசிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai