Enable Javscript for better performance
நில அபகரிப்பு புகார்: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    நில அபகரிப்பு புகார்: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு

    By dn  |   Published on : 02nd March 2014 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் கன்னங்குறிச்சி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வெங்கடகிரியின் மகன் ராஜாராம் (38). இவர் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார்.

    2009-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் கன்னங்குறிச்சியில் இவர் வாங்கிய 10,224 சதுர அடி நிலத்தை காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான சேலம் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, அவரது ஆதரவாளர்களான ராஜாராம் நகரைச் சேர்ந்த சகுந்தலா, கிச்சிப்பாளையம் திருநீலகண்டர் தெருவைச் சேர்ந்த கே.வி.குமரேசன், இரண்டாவது அக்ரஹாரத்தைச் சேர்ந்த அம்மாசி, வேதா ஆகியோர் அபகரித்து வேலிபோட முயற்சிப்பதாகவும், அந்த நிலத்தை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதையடுத்து, கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் முன்னாள் எம்.பி. கந்தசாமி, தொழிலதிபர் குமரேசன் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai