சுடச்சுட

  

  நீக்கப்பட்ட தாற்காலிக ஊழியர்கள் 1,420 பேருக்கு மீண்டும் வேலை

  By dn  |   Published on : 02nd March 2014 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rangaswamy

  புதுச்சேரியில், பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை தாற்காலிக அரசு ஊழியர்கள் 1,420 பேருக்கு 3ஆம் தேதி முதல் மீண்டும் வேலை வழங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

  புதுவை சட்டப்பேரவைச் செயலகத்தில் அவர், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

  பொதுப்பணித்துறையில் 1,311 பேருக்கும் கால்நடை பராமரிப்புத் துறையில் 109 பேருக்கும் மீண்டும் பணிநியமன ஆணை வழங்கப்படும். அவர்கள் திங்கள்கிழமை முதல் பணிக்குச் செல்லலாம். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.137 ஊதியமாக வழங்கப்படும்.

  அதே போல் பொதுப்பணித்துறையில் கடந்த பல ஆண்டுகளாக பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகள் 150 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும். அனைவரும் முழு நேர தினக்கூலி ஊழியர்களாக நியமிக்கப்படுவர். இவர்களும் 3 ஆம் தேதி முதல் பணிக்குச் செல்லலாம்.

  அதிநவீன சிறப்பு மருத்துவமனை: காரைக்காலில் அதிநவீன சிறப்பு அரசு மருத்துவமனை கட்ட வரும் 3 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதற்கு கடந்த 2006 ஆம் ஆண்டே அரசு திட்டமிட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின் காரைக்காலில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் முதல் கட்டமாக மருத்துவமனை கட்ட ரூ.45 கோடி நிதி வழங்கி உள்ளது. முதலில் மருத்துவமனை கட்டப்படும். பின்னர் மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்படும் என்றார் ரங்கசாமி.

  தாற்காலிக ஊழியர்கள் மகிழ்ச்சி: மீண்டும் வேலை வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு, மிகுந்த மனநிறைவைத் தருவதாக, நீக்கப்பட்ட தாற்காலிக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai