சுடச்சுட

  

  மதுரை மத்திய சிறையிலிருந்து 14 கைதிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்காக சென்னைக்கு சனிக்கிழமை சென்றனர்.

  தமிழகத்தில் வரும் மார்ச் 3-ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. இத் தேர்வை மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளும் எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் ஆயுள் தண்டனைக் கைதிகளான சிவக்கண்ணன், தினேஷ்குமார், காளீஸ்வரன் உள்ளிட்ட 14 பேருக்கு தேர்வு எழுதிட அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக தேர்வு எழுதும் கைதிகள் 14 பேரும் இரவு, பகலாக படித்து வந்தனர். இந்த நிலையில் தேர்வுக்காக சனிக்கிழமை காலையில் வேனில் கைதிகள் அனைவரும் சென்னைக்குப் புறப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் மாலையில் சென்னையை அடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

  தேர்வு எழுதச் செல்வோரில் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், 2 பேர் 8 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனையும் பெற்றவர்கள். புழல் சிறையில் அமைந்துள்ள தேர்வு அறையில் பிளஸ் 2 தேர்வை எழுதும் கைதிகள் 14 பேரும் தேர்வு முடிந்ததும் மதுரை திரும்பவுள்ளனர்.

  தேர்வெழுதச் செல்லும் கைதிகளை மதுரை மண்டல சிறை டி.ஐ.ஜி. முகம்மது ஹனீபா மற்றும் மதுரை சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பினர்.

  வரும் 23-ம் தேதி கைதிகள் அனைவரும் மீண்டும் மதுரை திரும்புவார்கள் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு மதுரைச் சிறை கைதிகள் 11 பேர் பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai