சுடச்சுட

    

    "புதிய சட்ட திட்டங்களை கம்பெனி செயலர்கள் அறிந்துக் கொள்வது அவசியம்'

    By dn  |   Published on : 02nd March 2014 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாறி வரும் சூழ்நிலையில் கம்பெனி செயலர்கள் புதிய சட்ட திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான நுணுக்கங்களை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என நிதித்துறை முதன்மைச் செயலர் கே.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

    இந்திய செலவின கணக்கியல் மதிப்பீட்டு கல்வி மையம் (ஐ.சி.ஏ.ஐ) சார்பில் "கம்பெனி சட்டம்-2013' சிறப்பம்சங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு எழும்பூரில் புதன்கிழமை நடைபெற்றது.

    இதில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் நிதித்துறை முதன்மைச் செயலர் கே.சண்முகம் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியது:

    அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் முதலீடு, செலவினங்கள், புதிய சட்டங்களை பின்பற்றுதல், நிதி தொடர்பான திட்ட அறிக்கைகளை திறம்பட கையாளுதல், வியாபாரரீதியான கூட்டு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கம்பெனி செயலர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைகள், நிறுவன இயக்குநர்களுடன் நல்லுறவு, ஆண்டுதோறும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சட்ட, திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கையாளும் செயலர்கள் நேர்மையானவர்களாகவும், திட்டமிட்டு செயலாற்றும் திறன்கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    1956-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை கம்பெனி சட்டத்தில் பல்வேறு கூறுகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்றவாறு செயலர்களின் கற்றல்திறன் நாளுக்குநாள் மேம்பட வேண்டும்.

    அப்போதுதான் நிறுவனங்களின் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஊழியர்களுக்கு அவர்கள் சிறந்த வழிகாட்டியாக விளங்க முடியும். குறிப்பாக சட்டத்தின் முழுமையான வடிவத்தை சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுத்தினால் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான எவ்வித பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார் கே.சண்முகம். நிகழ்ச்சியில் ஐ.சி.ஏ.ஐ. அமைப்பின் தென்னிந்திய மண்டல கவுன்சில் தலைவர் பி.ராஜு ஐயர், துணைத்தலைவர் எச்.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து

    கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai