சுடச்சுட

  

  போலீஸ் காவலில் விசாரணை முடிந்தது: பறவை பாதுஷா நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

  By dn  |   Published on : 02nd March 2014 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான பறவை பாதுஷாவை காவலில் எடுத்து விசாரித்த போலீஸார், அவரை திருநெல்வேலி நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தினர். இவ் வழக்கு விசாரணை இம் மாதம் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  மேலப்பாளையம் பங்களப்பா தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 17.5 கிலோ வெடிபொருள்கள், 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

  இவ் வழக்கு தொடர்பாக பதுங்கியிருந்த மேலப்பாளையம் ஹாமீன்புரத்தைச் சேர்ந்த காஜாமுகைதீன் மகன் முகமது ஷாகுல் ஹமீது என்ற பறவை பாதுஷாவை (28) சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கடந்த 23-ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

  இதன்பின்பு பறவை பாதுஷாவை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-1 அனுமதி வழங்கியது. அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரித்தனர்.

  போலீஸ் காவல் முடிந்து பறவை பாதுஷாவை, சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-1-ல் நீதித்துறை நடுவர் ராமலிங்கம் முன்பு சனிக்கிழமை ஆஜர்படுத்தினர்.

  இதையடுத்து இவ் வழக்கு விசாரணையை இம் மாதம் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

  வெடிபொருள்கள் சேகரிப்பில் தொடர்பு: பறவை பாதுஷாவின் போலீஸ் காவல் குறித்து சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் கூறுகையில், இம் மாவட்டத்திலிருந்து வெடிபொருள்களைச் சேகரித்து கிச்சான்புகாரி உள்ளிட்டோர் உதவியுடன் பறவை பாதுஷா வழங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதாணை பெற்று நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தனியாக போலீஸ் காவலில் எடுத்து கர்நாடக போலீஸார் விசாரிக்க வாய்ப்புகள் உள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai