சுடச்சுட

    
    ramadoss

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைப் பயிரிட்டு சோதனை நடத்த, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல், கோதுமை உள்ளிட்ட 200 வகையான பயிர்களை வயல்களில் பயிரிட்டு சோதனை நடத்துவதற்கு மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி தலைமையிலான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

    இது இந்திய விவசாயத்தை அமிலம் ஊற்றி அழிப்பதற்கு சமமானதாகும். பி.டி. பருத்திக்குப் பிறகு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காயை இந்தியாவில் சந்தைப்படுத்த முயற்சிகள் நடந்தபோது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் தடை விதித்தார். அதுமட்டுமின்றி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை இந்திய மண்ணில் பயிரிட்டு சோதித்து பார்ப்பதையும் தடை செய்தார். அவருக்குப் பிறகு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனும் இதே அணுகுமுறையைக் கடைப்பிடித்தார்.

    ஆனால் தற்போது சோதனை நடத்துவதற்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் பன்னாட்டு விதை நிறுவனங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்தப் பதவியில் வீரப்ப மொய்லி அமர்த்தப்பட்டாரோ என்ற ஐயம் எழுகிறது.

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் பாதிக்கப்படும் விவசாயம், சுகாதாரம் ஆகிய 2 துறைகளும் மாநிலப் பட்டியலில் இருக்கிறது.

    இது தொடர்பாக, மாநில அரசுகளிடம் கலந்து பேசாமல் கள ஆய்வுக்கு வீரப்ப மொய்லி அனுமதி அளித்திருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான செயலாகும். கள ஆய்வுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஈடுசெய்ய முடியாதவையாக இருக்கும் என்பதால், அதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai