Enable Javscript for better performance
மருத்துவ மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ்: பேராசிரியர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ மாணவியின் கைப்பேசி, வலைதளத்துக்கு ஆபாசமான தகவல்களை அனுப்பியதாக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, தற்போது, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் மகப்பேறு மருத்துவத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில், தனது கைப்பேசி, ஃபேஸ்புக்குக்கு சேலம் அரசு மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் செந்தில்குமார் (46) ஆபாசத் தகவல்களை அனுப்பி வருவதாக சேலம் மாநகரக் காவல் துறை ஆணையர் அமல்ராஜிடம் அந்த மாணவி புகார் தெரிவித்தார்.

    இந்த புகாரையடுத்து, மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாரதாதேவி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை வெள்ளிக்கிழமை இரவுக் கைது செய்தார். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள நாவலூரைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார் தற்போது ராசிபுரத்தில் தங்கியுள்ளார். இவருக்குத் திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். தனியார் வங்கி அதிகாரியான இவரது மனைவி, கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமாரைப் பிரிந்து சென்று விட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai