சுடச்சுட

  

  வனவிலங்குகள் தாக்கி பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் உதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

  By dn  |   Published on : 02nd March 2014 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காட்டு யானைகள் மற்றும் காட்டுப் பன்றி தாக்கியதால் பலியான 5 பேரின் குடும்பத்துக்கு வனத்துறை மூலம் தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

  இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கோவை மாவட்டம் துடியலூர் வேலாண்டிபாளையம் வெங்கிட்டாபுரத்தைச் சேர்ந்த கருணாகரன், பிப்ரவரி 4-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தெங்குமரஹடா பகுதியைச் சேர்ந்த அசோகன், பிப்ரவரி 8-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் ஆசனூர் குத்தியாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சென்னியப்பனின் மகன் நாச்சிமுத்து, பிப்ரவரி 15-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பண்ணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னவீரப்பாவின் மகன் வெங்கடேஷ் ஆகியோர் காட்டு யானைகள் தாக்கியதில் உயிரிழந்தனர்.

  பிப்ரவரி 10-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குண்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜின் மகன் சுரேஷ் காட்டுப் பன்றி தாக்கியதில் உயரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

  காட்டு யானைகள் மற்றும் காட்டுப் பன்றி தாக்கியதில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவர்களின் குடும்பத்தினருக்கு வனத்துறை மூலம் தலா ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

  சிமெண்ட் ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் உதவி: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் ஆலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சௌந்தரராஜனின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai