சுடச்சுட

  
  sudharsana_nachiappan

  தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நல்ல நட்பைத் தொடர்கிறோம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

  சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது: ரூ.5,740 கோடி மதிப்பீட்டிலான மோனோ ரயில் திட்டத்துக்கான முழுமையான திட்ட அறிக்கையை தமிழக அரசு விரைந்து வழங்கினால் ஜப்பான் நாட்டின் நிதி உதவிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யும்.

  ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க. தானாகவே விலகியது. பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோரியது. தே.மு.தி.க.வும் இதேபோல் கோரியபோது தி.மு.க.வுக்கே ஆதரவளிக்கப்பட்டது. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி யாரையும் வெளியேற்றவில்லை. காங்கிரஸ் கட்சி மீது எப்போதும், மதிப்பும் மரியாதையையும் விஜயகாந்த் வைத்துள்ளார். நாங்களும் அதே நட்பை அவருடன் தொடர்கிறோம். மேலும் காங்கிரஸ், தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தால் வலுவாக இருக்கும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து இறுதி நிலவரம் தெரியும்.

  கருத்துக் கணிப்பு என்பதெல்லாம் கேட்கப்படும் கேள்விகள், யாரிடம் கேட்கப்படுகிறது, எத்தனை பேரிடம் கேட்கப்படுகிறது என்பதைப் பொருத்தது. ஒரு கருத்துக் கணிப்பில் 45 சதவீதம் பேர் மோடியை விரும்புகின்றனர். அதே நேரம் 12 சதவீதம் பேர் மட்டுமே பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். இது என்ன கணிப்பு?

  இலங்கைப் பிரச்னையில் கருத்து மாற்றம் தேவை: சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து தமிழக அரசு

  முன்னெச்சரிகையுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். விடுதலைப் புலிகளை தொடர்ந்து எதிர்த்து வந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவும், பத்திரிகையாளர் சோவும்தான். எனவே, இக்கருத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மாற்றம் கொண்டுள்ளாரா எனத் தெரியவில்லை. அப்படி இருப்பின் இக்கருத்தை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோல முன்பு முதல்வராக இருந்தபோது திமுக தலைவர் கருணாநிதியும் செய்தார். பிறகு அவர் புரிந்து கொண்டார்.

  எனவே தேவையற்ற செயல்களில் யாரும் ஈடுபட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றார் சுதர்சன நாச்சியப்பன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai