சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் (35). இவர் சென்னை, கே.கே.நகரில் தங்கி சினிமாவில் கலை இயக்குனராகப் பணி செய்து வருகிறார். சமீபத்தில் வெளியான மதுபானக்கடை திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றினார்.

    கடந்த பிப்.27 ஆம் தேதி சிவராத்திரி தினத்தன்று கோவை வந்த அவர் இரவு பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை சென்றுள்ளார். இரவு மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து விட்டு மறுநாள் காலை இறங்கும் நேரத்தில், வழிதவறி காட்டுக்குள் சென்றதாகத் தெரிகிறது. ÷பிறகு அவர் என்ன ஆனார் என்பது குறித்து தகவல் இல்லை. இது குறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதைத் தொடர்ந்து கனிக்கரடி பகுதி மலைவாழ் மக்கள் அடங்கிய மூன்று தனித்தனி குழுவினர் வினோத்தை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். வினோத்தின் செல்போன் ரகசிய எண்ணை வைத்து அவரை கண்டுபிடிக்க போலீஸார் முயற்சி செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai