சுடச்சுட

  
  arts

  திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபப் பகுதியில் புதையுண்ட சிலைகளை கண்டெடுக்கும் முயற்சியாக சனிக்கிழமை அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது.

  ஆயிரங்கால் மண்டபத்தின் உள்பகுதியின் பெரும்பாலான தூண்கள் சிதிலமடைந்திருந்தது. அவற்றை புதுப்பிக்கும் பணியையும், இந்த மண்டபத்தின் நுழைவுவாயில் பகுதியிலுள்ள பெரிய யானை சிலைகள் உள்ளிட்ட புதையுண்ட சிலைகளை தோண்டியெடுக்கும் பணிகளையும் மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவு செய்தது.

  இதற்கான அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இப்பணியை இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் மற்றும் சுற்றுலாத் துறைச் செயலர் கண்ணன் தொடக்கி வைத்தார்.

  தொல்லியல் துறை ஆணையர் எஸ். வசந்தி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் அகழ்வாராய்ச்சிப் பணியை மேற்கொள்ள உள்ளனர். இப்பணியின் முதல்கட்டமாக, ஆயிரங்கால் மண்டபத்தின் வடக்குப்பகுதியில் புதையுண்டிருந்த 12 அடி உயர யானைச் சிலையைத் தோண்டியெடுத்தனர்.

  மண்டபத்தின் முகப்புப் பகுதி பெரும்பாலும் மண்ணில் புதையுண்டிருப்பதால் தொடர்ந்து தோண்டும் பணி நடைபெறும் என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

  அகழ்வாராய்ச்சியின் மூலம் பழங்கால காசுகள், மோதிரம், மண்டபம் குறித்த கல்வெட்டுகள், பழங்கால சிலைகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai