சுடச்சுட

    

    62-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் ஸ்டாலின்: கருணாநிதி, ப.சிதம்பரம், ரஜினிகாந்த் வாழ்த்து

    By dn  |   Published on : 02nd March 2014 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin_birthday

    திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 62-ஆவது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடினார்.

    திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

    4 மணி நேரத்துக்கும் மேலாக மேடையில் நின்றவாறு, மு.க.ஸ்டாலின் தொண்டர்களின் வாழ்த்தைப் பெற்றார்.

    62-ஆவது பிறந்த நாளையொட்டி, கோபாலபுரம் இல்லத்துக்கு சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்டாலின் சென்றார். திமுக தலைவரும், தந்தையுமான கருணாநிதி, தாயார் தயாளு அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார்.

    பின்னர் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பிய ஸ்டாலின், அங்கு குடும்பத்தாருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

    இந்நிகழ்ச்சியில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மகன் உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா, கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, மகள் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அதன் பின், ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு ஸ்டாலின் வந்தார். அவரை மேளதாளம் முழுங்க திமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து, மேடைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ஏற்பாட்டின் பேரில் அமைக்கப்பட்டிருந்த 62 கிலோ எடை கொண்ட கேக்கை ஸ்டாலின் வெட்டினார்.

    4 மணி நேரம் வாழ்த்து: பின்னர் மேடையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நின்றவாறே, திமுக தொண்டர்களின் வாழ்த்தை மு.க.ஸ்டாலின் பெற்றார். வெள்ளி வாள், பணமாலை உள்ளிட்டவை அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டன. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், நாடாளுமன்றத் திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு, ஐ. பெரியசாமி, கே.என்.நேரு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், நடிகை குஷ்பு உள்பட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    ரஜினி வாழ்த்து: நடிகர் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோர் ஸ்டாலினுக்குத் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    புதிய இணையதளம்: மேலும், மேடையில் மு.க.ஸ்டாலின் ஜ்ஜ்ஜ்.ம்ந்ள்ற்ஹப்ண்ய்.ண்ய் என்ற தனது இணையதளத்தில் புதிய வடிமைப்பையும் தொடங்கி வைத்தார். ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட வசதிகளை இணைத்து, இந்த வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

     

    40 தொகுதிகளிலும் வெற்றி பெற உறுதி

    எனது பிறந்த நாளை ஆடம்பரமாக இல்லாமல், எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் கொடுத்தேன். அதைக் கடைப்பிடித்ததற்காக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் கொடுத்தேன். அதை நிறைவேற்றியுள்ளனர். அதற்கும் தொண்டர்களுக்கு நன்றி கூறினேன். நல உதவிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கோருகிறேன்.

    மக்களவைத் தேர்தலில், கருணாநிதி அமைக்கும் கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றிபெற செய்ய திமுகவினர் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் மு.க. ஸ்டாலின்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai