சுடச்சுட

  

  அனைத்து தொகுதிகளிலும் மோடிதான் வேட்பாளர் என்று கருதி தேர்தல் பணியாற்றுங்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

  By dn  |   Published on : 03rd March 2014 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chennI_bjp

  தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் நரேந்திரமோடிதான் மக்களவை வேட்பாளர் என்று கருதி அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

  தாம்பரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:

  வரவிருக்கும் தேர்தல் மூலம் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்கும் வலிமையுடன் திகழும் நாம் யாருடைய தோள் மீதும் ஏறி பயணம் செய்ய விரும்பாமல், நம்முடன் இணைந்து வர விரும்புகிறவர்களின் கைகோர்த்து பயணம் செய்யவே ஆசைப்படுகிறோம்.

  பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டணி பற்றி கவலைப்படாமல் மோடியை பிரதமராக்குவதே லட்சியம் என்ற ஒரே சிந்தனையுடன் தேர்தல் பணியில் ஈடுபடுங்கள். மோடிக்கு வாக்களிக்க மக்கள் தீர்மானித்து விட்டனர். அந்த வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குச் சிந்தாமல் சிதறாமல் அழைத்து வந்து வாக்களிக்க வைக்கும் வரை உற்சாகத்துடன் களப்பணியில் ஈடுபடுங்கள்.

  நம்முடைய கூட்டணியில் இடம் பெற விரும்பும் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றோம். தில்லியில் கட்சி மேலிடம் அறிவுறுத்தியபடி ஒரிரு நாள்களுக்குள் தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சுமுகமான முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம் என்றார்.

  கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நெமிலி ஊராட்சி திமுக கிளை செயலாளரும், முன்னாள் தலைவருமான அறிவழகன் 100 பேருடன் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ. கட்சியில் இணைந்தனர்.

  பா.ஜ.க. தேசிய செயலாளர் தமிழிசை செளந்திரராஜன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், வழக்கறிஞர் பாலாஜி, பொற்றாமரை சங்கரன், அசோக் ஜெயின், தாம்பரம் நகர பொதுச்செயலாளர் சதீஷ்குமார், தாம்பரம் நகர மகளிர் அணித் தலைவி ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai